இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம்
மழையால் கைவிடப்பட்டமை ஏமாற்றம் தருவதாக தெரிவித்துள்ளார் இந்திய
அணித்தலைவர் விராட் கோலி.இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்கு நாட்கள் மழையால்
பாதிக்கப்பட்டன. முதல் நாள் ஆட்டம் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. ஆனால் முதல் நாள் ஆட்டத்திலேயே வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சார்பாக அமைந்தன. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களில் சுருண்டது. இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலக்குகள் இழப்பின்றி 80 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஆட்டத்தின் இறுதி நாளின்பொழுது கருத்துத் தெரிவித்த கோலி – ‘மழையால் ஆட்டம் கைவிடப்பட்டமை ஏமாற்றமாக உள்ளது. முதல் நாள் ஆட்டம் எங்களுக்கு சிறப்பாக அமைந்த நிலையில் 2ஆவது மற்றும் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டமை வெறுப்பாக இருந்தது. முதல் நாளில் கடினமாக போராடி ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் வானிலை எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. அடுத்த நாட்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனது. ஆட்டம் சிறப்பாக அமைகிறதோ, இல்லையோ மைதானத்துக்கு வந்து விட்டு விளையாடாமல் இருப்பது என்பது எந்த அணிக்கும் எரிச்சல் அடையத்தான் செய்யும். 4ஆவது நாளிலாவது வாய்ப்பு கிடைத்திருந்தால் கடைசி நாளில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என்றார்.
Post a Comment