0
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 425 கிராம் டின் மீனின் விலை 125 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பருப்பின் சில்லறை விலை 169 ரூபாவாகவும் ஒரு கிலோ கடலையின் சில்லறை விலை 169 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
இதனை தவிர, ஒரு கிலோ கிழங்கை 75 முதல் 80 ரூபாவுக்கும் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் விசேட விற்பனை வரியை 25 ரூபாவாக குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 85 முதல் 95 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
குழந்தைகளுக்காக பால்மா பக்கட் ஒன்று 100 ரூபாவால் குறைவடைந்துள்ளது
மேலும், கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும் நிர்ணய விலையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top