0
சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்டத் தரவரிசையில் இலங்கை அணித்தலைவர் மத்தியூஸ் ஆறாவது இடத்திலுள்ளார்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் சுழல் வீரர் கேரத் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அஸ்வின் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் முதலிடத்திலும், பந்துவீச்சில் ஸ்ரெயின் முதலிடத்திலும் உள்ளனர். இதன்படி இரண்டு தரவரிசைகளிலும் தென்னாபிரிக்கா வீரர்ளே முதலிடத்திலுள்ளனர் என்ற பெருமையை அந்த அணி பெறுகிறது.

துடுப்பாட்டத் தரவரிசைப் பட்டியல் – வில்லியர்ஸ், சிமித், வில்லியம்சன், ரூட், வோர்ணர், அம்லா, மத்தியூஸ், யுனிஸ்கான், குக், ரெய்லர் முறையே முதல் பத்து இடங்களிலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் – ஸ்ரெயின், அண்டர்சன், சாஜ், புரோட், அஸ்வின், போல்ட், பிளன்டர், கேரத், ஜோன்சன், மோர்கல் முறையே முதல் பத்து இடங்களிலும் உள்ளனர்.

Post a Comment

 
Top