0
 
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தின் உள்வீதியொன்றில்நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை போக்குவரத்துப் பொலிஸாரின் தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.


நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் கிராமத்தின் உள்வீதியூடாகச் சென்ற இரண்டு இளைஞர்களை போக்குவரத்துப் பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

பொலிஸாரின் தடையைமீறி வீதியில் ஓடிய இளைஞர்களை துரத்திச்சென்ற பொலிஸார் அந்த இளைஞர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.
இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குற்றத்தைக் கண்டால் அவை தொடர்பான பதிவுகளை மேற்கொள்வது, கைதுசெய்வது மற்றும் விசாரணை நத்துவதுமே பொலிஸாரின் கடமை எனவும் தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் கடமை எனவும் மண்முனை களுவாஞ்சிகுடி பிரதேச சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்படவர்கள் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்சமூக செயற்பாட்டாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top