மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியை மறித்து இன்று(15) பட்டிப்பளை பிரதேச சிவில் அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கருத்து வெளியிடுகையில், புத்த பிக்குவை கைது செய்ய வேண்டும் அல்லது இங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லையேல் இது போன்ற போராட்டங்கள் மாவட்டம் பூராகவும் வெடிக்கும்.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரரின் செயற்பாடுகளும் அட்டகாசங்களும் பல வருட காலமாக தொடர்கின்றது. அவர் மத குருவாகச் செயற்படாமல் ஏனைய இன மக்களை அடக்கி ஆளுகின்ற மதம் பிடித்த பிக்குவாகத்தான் செயற்பட்டு வருகின்றார்.
உங்களின் அப்பாவின் காணியா? அம்மாவின் காணியா? என கிராம சேவகரிடம் குறித்த புத்த பிக்கு கேட்டிருந்தார். மாறாக புத்த பிக்குவின் அப்பாவின் காணியா? அம்மாவின் காணியா? அல்லது சிங்கள இனத்தின் காணியா? என நான் புத்த பிக்குவிடம் கேட்கின்றேன். நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல. இந்த நாட்டில் ஆதிக் குடிகள். எனவே எங்களிடம் அப்படிக் கேட்பதற்கு என்ன அருகதை இருக்கின்றது?
குறித்த பௌத்த மத குரு 2016 ஆம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் கிராம சேவையாளர் ஒருவரை மறித்து வைத்தமை மற்றும் கடந்தவாரம் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுடன் சட்டத்திற்கு முரணான முறையில் நடந்து கொண்டமை ஆகிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுகின்ற பொலிசாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக நாம் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளோம். எனவே மத்திய அரசானது இவ்விடயத்தில் துரித கதியில் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

Post a Comment