இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில்,
குறித்த புத்த பிக்கு அரச நிருவாகத்தை முடக்கியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்களை கடுமையாக அவமதித்துப் பேசியிருக்கின்றார். அடிப்பதையும் விட மன உழைச்சலை உண்டு பண்ணக் கூடிய விதத்தில் நடந்து கொண்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கிராம சேவை உத்தியோகத்தரும் பிரதேச செயலாளரும் முறைப்பாடு செய்துள்ளனர்.
மங்களகம பொலிஸ் பிரிவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்வதில் சட்ட ரீதியான சிக்கல் இடம்பெற்றிருந்தன.
ஆனாலும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பணிப்புரையின் பேரில் தற்போது கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.





Post a Comment