0
கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கிரான் பிரதேச பண்ணையாளர்களுக்கு 50 வீத மானிய அடிப்படையில் நல்லின காளை மாடுகள் வழங்கும் நிகழ்வு நேற்று  (01) கிரான் புலிபாய்ந்தகல் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன், கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளர் பார்சி, விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, அலுவலக உத்தியோகஸ்தர்கள், பண்ணையாளர்கள், பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 10 பண்ணையாளர்களுக்கு 50 வீத மானிய அடிப்படையில் நல்லின காளை மாடுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் சந்திரதாஸ் என்பவருக்கு இயற்கை முறையிலான உயிரியல் வாயு உற்பத்திக்கான ஊக்குவிப்புத் தொகையாக ருபா 50000.00 ற்கான காசோலையும் அமைச்சர் அவர்களின் பிரத்தியேக நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top