0
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் டென்மார்க்கில் நடாத்தும் கலை,இலக்கிய நிகழ்வில் முதல் நாள் நிகழ்வில் 05.11.2016 அன்று "தமிழர்கள் ஈழத்தின் மரபுவழி பிறப்புரிமைக் ஆதிக்குடிகளே" என்ற தலைப்பிலும்,இரண்டாம் நாளில் 06.11.2016 அன்று "உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கலை இலக்கிய வளர்ச்சியில் தாயகத்தை நோக்கிய பங்களிப்பு" ஆகிய தலைப்புக்களில் உரை நிகழ்த்தினார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இயக்கர், நாகர் ஆகிய ஆதிக் குடிகள் இலங்கையில் வாழ்ந்துள்ளனர். நாகர் வழி வந்தவர்களே தமிழர்கள். நாகர்கள் உயர்ந்த பண்பாட்டை உடையவர்கள். கடலோடிகள். சிறந்த விழுமியங்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

இலங்கையின் வட பகுதியை மாத்திரமல்ல , தென் பகுதியில் பல இடங்களில் ஆட்சி செய்தவர்கள். இதனை வரலாற்று மானிடவியல் புதைபொருள் ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. இன்று தமிழர்கள் இந்நாட்டுக்கு உரியவர்கள் அல்ல.அவர்கள் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என இனவாதம் பேசும் பொதுபலசேனா, இராவணபலய போன்ற  மதவாத அமைப்புகள் தமிழர்களின் பூர்விக பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும்,
புரிந்துகொள்ள வேண்டும் என பல விடயங்களை முன் வைத்துப் பேசினார் .

டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினருடன்  சேர்ந்து  தமிழ் ஆவண காப்பக கண்காட்சியையும் திறந்து வைத்தார்.




Post a Comment

 
Top