கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினத்தில், வரலாற்று புகழ் பெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயத்தில் சூரன்போர் பல்லாயிர கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.
இந்நிகழ்வானது இன்று பிற்பகல் வேளை ஆலய முன்றலில் இடம்பெற்றது.
சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் கடந்த திங்கட்கிழமை(31.11.2016) ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று ஆறாம் நாளான இன்று ஷண்முக அர்ச்சனை நடைப்பெற்றது.
நாளையதினம்(06.11.2016) பாறணைப் பூசையும், அதனைத் தொடர்ந்து மாலை திருக் கல்யாணமும் இடம்பெறவுள்ளது.
சூரன்போர் நிகழ்விற்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்ததுடன், இதைத் தொடர்ந்து ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.
இவ்வருடத்திற்கான கந்தசஷ்டி விரதம், சூரன்போர் என்பன மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தலுடன் ஆலயத்தின் அரங்காவல் சபையினரால் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment