0
குடிநீரை முக்கிய தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துமாறும், வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோக சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

மேல்மாகாணம், வடக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களின் நீர் நிலைகளின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்து செல்கின்றது.

அதுபோல் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக நிர் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

நீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு நீர்விநியோக சபையின் பௌசர்கள் மூலம் நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர்விநியோக சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக நீரை விரையமின்றி, அவதானமாக பயன்படுத்துமாறும் அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

 
Top