புணாணை பகுதியில் ஐந்து சிங்கள குடும்பங்கள் இருந்த இடத்தில் மீள்குடியேற்ற அமைச்சோடு சேர்ந்து பௌத்த பிக்குகளுமாக இருபத்தொன்பது குடும்பங்களை குடியேற்றியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புணாணை மீள் குடியேற்ற கிராமத்தில் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த எல்லைக் கல் இடும் பணி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு ஆலய முன்றலில் நேற்று(20.10.2016) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வழங்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்து மக்களின் கலை, கலாச்சார, ஆன்மீக வழிபாட்டு முறைமைகள் பௌத்த மத வழிபாட்டு முறைமையில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும். எனவே அதற்கேற்றால் போல் இந்து ஆலயங்கள் வேறுபடுத்தப்பட்டு வணக்க முறைகள் இடம் பெறவேண்டும்.
இப்பிரதேசத்திற்கு எமது மக்கள் 1960 காலப் பகுதியில் வந்து குடியேறியவர்கள். அவர்கள் அடிக்கடி இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பல இழப்புக்களை எதிர்நோக்கியவர்கள். அவர்களுக்கு சொந்தமான காணியில் அவர்கள் விரும்பிய தெய்வத்தினை வழிபட உரிமையுள்ளவர்கள்.
பல முறை இப்பிரதேச மக்கள் இந்த ஆலயத்திற்கு வேலி இட வந்தால் இங்குள்ள இராணுவ அதிகாரியும் இராணுவ உத்தியோகஸ்த்தர்களும் விகாராதிபதியும் எமது மக்களை அப்பணியினை செய்ய விடாது தடுத்து வந்தனர். இவ்விடயம் இந்த நல்லாட்சியில் எவ்வாறு சாத்தியமாகும் என்றார்.
இப்பகுதியில் ஐந்து சிங்கள குடும்பங்கள் மாத்திரமே இருந்தனர். யுத்தத்திற்கு பிற்பாடு அவர்கள் இடம்பெயர்ந்து சென்று, கடவத்தமடு என்ற பகுதியில் இருப்பிடங்கள் வழங்கப்பட்டு, இருபது வருடங்களாக நிவாரணம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தத்திற்கு பின்னர் இங்கு வருகை தந்த பிக்கு இந்து ஆலயத்தை ஓரளவு தெரியும் அளவிற்கு வைத்து விட்டு இந்து ஆலய காணிக்குள் பௌத்த தேவாலயத்தை ஸ்தாபித்துள்ளார்.
அத்தோடு இவர்கள் வன பரிபாலன திணைக்களத்திற்குரிய காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Post a Comment