மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை நிறுத்த கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கையெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பகுதிகளில் அத்துமீறல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
வாகரையில் அத்துமீறிய குடியேற்றங்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.
சிங்கள மக்கள் என்றாலும் முஸ்லிம் மக்கள் என்றாலும் இடம்பெயரும்போது அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது.
ஆனால் தமிழ் பகுதிகளில் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் அத்துமீறிய குடியேற்றங்களை அனுமதிக்கமுடியாது. வாகரையில் நூறுவீதம் தமிழ் மக்கள் உள்ள பகுதியில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுப்படுகின்றன.
நாங்கள் எந்த மததத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் மதத்தினை இன்னுமொரு இடத்தில் திணிப்பதை அனுமதிக்கமாட்டோம்.



Post a Comment