கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் கம்சன் கதை விரதம் இன்று ஆரம்பமானது.அரக்க குணம் கொண்ட கம்சனின் கொடூரத்தில் இருந்து கிருஷ்ண பரமாத்மா மக்களை விடுவித்த நாளை நினைவு கூரும் முகமாக இந்த நாளை பக்தர்கள் விரதமிருந்து 5ம் நாள் நொண்டிக்கூத்து ஆடி நிறைவு செய்யும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெறும்.
மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் மிகவும் சிறப்பாக இடம்பெறும் நொண்டிக்கூத்து நிகழ்வு எதிர்வரும் 15.10.2016 சனிக்கிழமை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment