0
உலகப்பிரசித்திபெற்ற பேச்சாளரான தமிழ்நாட்டை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஜெயந்திஸ்ரீ பாலகிருஸ்ணனின் கருத்துப்பகிர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மனித நேயக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் புதிய வெளிச்சம் என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மன நிலையில் பல்வேறு மாற்றங்களைக்கொண்டுள்ள சமூகத்தினை ஆற்றல்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மனநல வைத்திய நிபுணர் கடம்பநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் தற்கொலைகள் மற்றும் கொலைகள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் இருந்து பாதுகாப்பான வாழ்வினை நோக்கி நகர்த்திச்செல்லும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

இதேநேரம் பொதுமக்களுக்கான ஆற்றுப்படுத்தல் நிகழ்வினைத்தொடர்ந்து மாணவர்களுக்கான நிகழ்வும் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.













Post a Comment

 
Top