0
சர்வதேச  சிறுமியர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணி

பொதுமக்களின் பங்கேற்புடன் 11.10.2016 இன்று நடைபெற்றது.

'வலிமையான பெண்கள் வலிமையான உலகம்' எனும் தொனிப் பொருளில் சிறுமிகளின் உரிமைகளை வலியுறுத்தி இந்த நடைபவணி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக முன்றலிலிருந்து ஆரம்பமான இந்நடைபவணி பிரதான வீதிவழியாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக்கடந்த சென்று செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்த்தில்  முடிவடைந்தது.

ஒவ்வொரு சிறுமிக்கும் கல்வியைப் பெற சமஉரிமை உண்டு, அதனை உறுதி செய்வோம்;. சிறுமியரின் உரிமைகளைப் பாதுகாப்போம். சிறுமிகள் நாட்டின் பெருமை. வலிமையான பெண்கள் வலிமையான உலகம் போன்ற வாசகங்களைக்கொண்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் மாணவர்கள் நடைபவணியில் ஈடுபட்டனர்.

இந்த நடைபவணியில் பாடசாலை மாணவர்கள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், மற்றும் அரசசார்பற்ற அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


Post a Comment

 
Top