பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடு எம்மையும் எமது மக்களையும் வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் மரணமானது எம்மைப் பொறுத்த மட்டில் மாறாத மனரணமாகவே அமைந்துள்ளது.
இவர்களின் மரணத்திற்கு சரியான நீதியையாவது அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் இந்நாடு மீண்டும் விபரீத பாதைக்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மரணமானது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வி.சுலக்சன்,ந.கஜன் ஆகிய மாணவர்கள் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாக துயரமான செய்தியொன்றினை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
என அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ இழப்புக்களைத் தாங்கி வாழும் எமது மக்களுக்கு மீண்டும் மீண்டும் உயிர் பறிப்புக்களைச் செய்கின்ற பொறுப்பற்ற செயற்பாடுகளை மன்னிப்பதென்பது கடினமாகவேயுள்ளது. நாளையப் பெறுமதியான பல தலைவர்களை நாங்கள் இழந்த நிலையில் சொல்லொணாத் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்,
மேலும், மேலும் எமது மக்களின் கொலைகளை எம்மால் சகித்துக் கொள்ள முடியாமலுள்ளது. பிள்ளைகளின் அருமையென்பது பெற்றோருக்கும், உறவினருக்குமே அது புரியும். துப்பாக்கிகளால் பேசும் துர்ப்பாக்கியர்களால் அதனை விளங்கிக் கொள்ளவே முடியாது. மாணவர்களின் இழப்புக்களினால் துடிக்கும் உறவுகளுக்கு அனுதாபங்களை வெறும் வார்த்தைகளால் வழங்கி விட முடியாது. அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால்தான் அந்த வேதனையைப் புரிந்து கொள்ள முடியும். மனிதம் மலினமாகிப்போன எமது தாயக மண்ணில் வாழ்வதென்பது மிகக் கடினமாகவேயுள்ளது.
காட்டாட்சி மறைந்து விட்டது இனி நல்லாட்சி மலர்ந்து விட்டது என்று புதிய ஆட்சியாளர்கள் கூறினார்கள். அதனை நம்பிய மக்களுக்கு இந்தத் கொலைகளை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்.
கடந்த கால ஆட்சியாளர்களின் தப்புகளால் இந்த நாடு 30 ஆண்டுகள் கொடிய யுத்தத்தினால் கொடு வினைகளை அனுபவித்தது. அப்படியான நிலைக்கு மீண்டும் இந்த நாடு செல்வதை யாராவது தூண்டினால், அவர்கள் மாமடையர்களாகவே இருக்க முடியும்.
நீதி விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மாணவர்களின் பொற்றோருக்கு மீண்டும் பிள்ளைகளை உயிர்ப்பித்துக் கொடுக் முடியாது. ஆனால் நீதியையாவது அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையேல் இந்நாடு மீண்டும் விபரீத பாதைக்குள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
'குட்டக் குட்டக் குனிவது அடிமைத்துவம், குட்டுவது மடைமைத்துவம்' கடந்த காலத்தில் 'குனிய முடியாது' என்பதனால்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தினார்கள் என்பதை குட்டுபவர்கள் இனி மேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
'மனிதம் புனிதமானது, அதனை மதியாதவர்கள் கைகளில் அதிகாரமும், துப்பாக்கிகளும் இருப்பதென்பது நாட்டுக்கே ஆபத்தாகி விடும்' சிந்திய குருதி போதாதாவென்பது சிந்தனையற்றவர்களிடம் கேட்கின்றேன்.
என அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment