கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று(22.10.2016) மாலை மட்டக்களப்பில் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா காலை மற்றும் மாலை அமர்வுகளாக சிறப்பான முறையில் இடம்பெற்று வந்துள்ளது.
நேற்று பிற்பகல் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இறுதி நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
இதன் போது கலைத்துறைக்கு பெரும் பங்காற்றிய மூத்த கலைஞர்கள் 12பேர் வித்தகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இளம் கலைஞர்கள் 18பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் இருந்து சிறந்த நூல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட ஆறு பேர் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவாசய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், வடக்கு கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் அடையாளங்களையும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் வருடாந்த தமிழ் இலக்கிய விழா நடாத்தப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment