0
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சிவன் ஆலய புனரமைப்புக்காக ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஆலய நிருவாகத்தினரிடம் நேற்று(22.10.2016) வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் வேண்டுகோளுக்கமைய இந்த ஆலய ஸ்தாபகரும் வைத்தியருமான மறைந்த காராளசிங்கத்தின் புதல்வரான ஜேர்மனியில் வசிக்கும் சகாதேவன் என்பவரால் ஐந்து இலட்சம் ரூபாய் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த ஆலயமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டதுடன் இதனை புனரமைத்து மக்களின் வழிபாட்டுக்கு வழங்குவதற்காக எந்தவித நிதி உதவியின்றி காணப்பட்டது. இவ்விடயமாக பாராளுமன்ற உறுப்பினருக்கு ஆலய நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இந்த உதவியை பெற்று எங்களுக்கு வழங்கி வைத்துள்ளார் என ஆலயநிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், சகாதேவனின் மருமகன் எஸ்.சாகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

 
Top