கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் கேதாரகௌரி விரதம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.அந்தவகையில் விரதத்தின் 07 ம் நாளாகிய இன்றையதினம் பி.ப 04.00 மணிக்கு லிங்கேஷ்வரருக்கு அபிசெகப்பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு அடுத்து கௌரி கும்பபூஜை ,கேதாரகௌரி தோத்திரங்கள் ,கதைகள் படிக்கப்பட்டு ,கேதாரகௌரி ஈஸ்வரர் போற்றிநாமங்கள்,பஞ்சபுராணம் பாடப்பட்டு இறுதியாக பிரசாதம் வழங்குதலுடன் இனிதே நிறைவெய்தியது.




Post a Comment