0
வந்தாறுமூலை கணேச வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ரி.சித்திரவேல் தெரிவித்துள்ளர்.
இதில் பு.அம்ஷனா 171, யோ.தர்ஷாளினி 171, ந.டிவிதன் 169, சி.மிதுர்ஷன் 168, ஜி.ஸ்ரீயங்கா 167, சு.டிலுக்ஷன் 166, வ.கஜனி 166, த.சதுர்ஷிக்கா 165, ம.பத்மநிலோஜன் 164, ஜெ.றொபின்சியா டிவாஞ்சலி 159, ம.ஷயுத்திஜா 159, க.தமிழினி 159, ரா.கவிசங்கரி 159, அ.கோபிகா 158, ஜெ.ஜெக்சானி 158, ர.ரிஷாளினி 156, க.யதுஷன் 155,ச.தனுறாஜ் 154, ம.கோபிகா 153 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளனர்.
குறித்த மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களான விவேக்கா நித்தியநாதன், எலிசபெத் விஜயந்தி கனகரெத்தினம் ஆகியோருக்கும்,மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது பாராட்டுக்களை பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இந்த பாடசாலையில் 64 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன், கல்குடா கல்வி வலயத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top