நாடாழுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்டு ஒருவருடங்கள் கடந்த நிலையில் மட்டக்களப்புச் சிறைச்சாலையில் இருந்த 13 அரசியல் கைதிகளில் 12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ஒருவர் மட்டுமே சிறைச்சாலையில் உள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாழுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைக் கைதிகளுக்கு தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கும் திட்டத்தில் பிரண்டினா நிறுவனத்தினரால் தேங்காய் உரி மட்டையை மூலப் பொருளாகப் பாவித்து தும்புத் தடி கட்டும் ஒரு வார காலப்பயிற்சி நெறியானது இன்று (03.10.2016) ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்
சிறைக் கைதிகளின் விடுதலையின் பின்பு அவர்களின் வாழ்க்கை மற்றும் சிந்தனையில் மாற்றம் பெற்று வாழ்வாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கோடு தேசிய தொழில் தகமைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தேங்காய் மட்டையில் காணப்படும் தூசிக்கு மேற்குலக நாடுகளில் கிராக்கி அதிகமாக உள்ளது. புச்செடிகள் வளர்ப்பதற்கான மண்ணிற்கு பதிலாக குறித்த தூசியைப் பயன் படுத்துகின்றனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பௌதீக வளங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன. குறித்த பயிற்சி நிலையம் இல்லாமல் உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் பேசியும், எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யவுள்ளேன். சிறைச்சாலையின் தற்போதைய அதிகாரிகள் மற்றும் நலன்புரிச் சங்கத்தினர் கைதிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கைதிகளில் கொண்டிருக்கும் நலனை விட அதிகளவான மனிதாபிமானமிக்க பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இறுதியில் குறித்த பயிற்சி நிலையம் அமைப்பதற்கான இடத்தை சிறைச்சாலையின் அத்திட்சகர் கே.எம்.யு.எச். அக்பர், பிரதம ஜெயிலர் எம். பிரபாகரன், பிரண்டினா நிறுவன மாவட்ட இணைப்பாளர் எஸ். டினேஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.

Post a Comment