மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்துக்கான வேலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
வரவு செலவுத்திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு முதல் கட்டமாக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு வருடகாலத்துக்குள் பூர்த்தி செய்வதற்காக முதல் கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது மாவட்ட செயலகம் இருக்கும் ஒல்லாந்து கோட்டையானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைப்புச் செய்யப்பட்டு நூதன சாலையாகபேணப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவால் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் புதியகட்டடம், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் புதிய கட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல்களும் நாட்டப்பட்டு வேலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தின் விருந்தினர் விடுதி ஆகியவையும் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment