0
கண்டி,கொழும்பு மாவட்ட இளம் குருந்திரைப்படவீடியோ (Videoதயாரிப்பாளர்கள் மற்றும் புகைப்படத் துறையில் (Photographyஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வீடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகமாகப் பயன்படுத்திபின் தங்கிய மக்களின் கதைகளை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி,அச்சமூகத்தினை வலுப்படுத்தும் உத்தி முறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது.

இத்தகைய கதை கூறல் மற்றும் புகைப்படங்கள் மூலம் பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு,அவற்றை குறுந்திரைக் கதைகளாக மற்றும் புகைப்படங்களாக உருவாக்கலாம்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்ற மானது பேரதனை பல்கலைகழக விவசாயபட்டப்பின் படிப்பு நிறுவகத்துடன் இனைந்து முதற் கட்டமாக இச் செயற்றிட்டத்தினை மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மிகவெற்றிகரமாக கடந்த வருடம் அமுல்படுத்தியது.

இதன் அடுத்தகட்டமாக கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மீண்டும் இச் செயற்திட்டத்தை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச் செயற்திட்டத்தின் நோக்கமானது இளைஞர்,யுவதிகளிடம் உள்ள காணொலி (Videoமறறும் புகைப்படம (Photographyஎடுக்கும் திறனை மேம்படுத்துவதும்,அதனூடாக வெளிச்சத்திற்குவராத உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணர்வதுமாகும்.
18-30 வயதிற்கு இடைப்பட்டதகுதிவாய்ந்தஇளைஞர்,யுவதிகள் இந்த இலவச செயற்திட்டத்தில்  பங்குபெறலாம்இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்ப்படும்.

விண்ணப்பமுடிவுத்திகதி : 15/10/2016 அதற்கு முன்னராக உங்கள் விண்ணப்பங்களை info@LDJF.org என்ற மின்னஞ்சல்  முகவரியின் ஊடாகவும் அல்லது
தபால் மூலமாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்
இல. 249,2/1,நாவலவீதிராஜகிரிய என்ற முகவரிக்கும் மேலதிக விபரங்களுக்கு 0776653694 / 0117209511 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்


Post a Comment

 
Top