மிகவும் அழகான முறையில் சேலை கட்டி வந்த யுவதிகள் சித்தாண்டியில் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ள முச்சந்தி விநாயகனை முதலில் வழிபட்டதுடன் பின்னர் சித்தாண்டி கந்தனை வழிபட்டுச் சென்றனர்.
வழிபாட்டுக்கு வந்த கொரியா நாட்டு யுவதிகள் தமிழ் மொழியில் 'வணக்கம், எப்படி சுகம், நல்லம், வாங்க' போன்ற பல நடைமுறை தமிழ் சொற்களை, தங்களைச் சந்தித்த மக்களுடன் பேசியதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் ஆலயத்திற்கு வருகை தந்த இந்து பக்தர்கள் கொரியா நாட்டு யுவதிகளின் கலாச்சாரப் பண்பை பாராட்டியதுடன், அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுப்பதற்கும் தவறவில்லை. படம் எடுப்பதற்காக முட்டிமோதி படங்களை எடுத்துச் சென்றனர்.
கடந்த காலங்களை விட அண்மைய காலங்களில் மேற்கத்தைய நாட்டு மக்கள் இந்து மத வழிபாடுகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றமையை அன்றாடம் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
Post a Comment