திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைந்த வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கலை விழாவானது 23.09.2016 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில்ஆரம்பமாகி 12.30 வரை நடைபெற்றது
இந் நிகழ்வு சார்ந்து நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்ட்து .
இதன்படி அனைத்துவருட கலை கலாசார பீட மாணவர்களுக்கிடையில் கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியம், சுவரொட்டி, புகைப்படமெடுத்தல், Photoshop, HTML, Interactive Presentation, Talk show, நடனம், நாடகம், கிராமியப் பாடல், புத்தாக்கப் பாடல், போன்ற தனி மற்றும் குழுப்போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி த.ஜெய்சங்கர் (உபவேந்தர்) பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தனர்.
பொதுவாக திருவிழாக்கள் என்பது சடங்குகள் சார்ந்து அல்லது கொண்டாட்டம் சார்ந்து வாழ்வோடு இணைந்தும் காணப்பட்டது கலைத்திருவிழா முழுக்க முழுக்க கொண்டாட்டம் சார்ந்ததாகும். வாழ்க்கையோடு அவை இணைந்தவையாகவும் நீண்ட காலமாகவே தமிழர் பாரம்பரியத்தில் திருவிழாக்கள் மிக பெரும் செல்வாக்கைப் பெற்று வந்துள்ளன. குறிப்பாக சோழர்காலத்தவர் திருவிழாக்களை ஒரு மதச்சடங்காக, குலவழக்கமாக காணவில்லை. பல்லாயிரம் மக்களை ஒரே இடத்தில் கூட்டும் நிகழ்ச்சியாக எண்ணினர். இவ்வாறு ஒருங்கிணைந்த சமூகமே சோழர் பேரரசின் அடித்தளமாக விளங்கியது
இதில் கலாசார பீட மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் இன்றி இந்நிகழ்வினை ஏட்பாடு செய்த கலை கலாசார பீட மாணவர்களுக்கும் வருகைதந்த அதிதிகளாலும் பழைய மாணவர்களாலும் பெரிதும் பாரட்டப்பட்ட்னர் .


Post a Comment