0
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும ம.தெ.எ பற்று பிரதேச செயலகமும் இணைந்து செட்டிபாளையம் திருவருள் நுண்கலை மன்றத்;தின் ஒத்துழைப்புடன் பதிவு செய்யப்பட் கலைக்கழகங்களுக்கான கருத்து பகிர்வு நேன்று(20.09.2016) செவ்வாய்கிழமை செட்டிபாளையம் சிறுவர் சிநேக பூர்வ நிலையத்தில் நடைபெற்றது. ம.தெ.எ பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற கலைகழகங்களின் சான்றிதழ் மற்றும் வெற்றி சின்னங்கள் மீண்டும் இன் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டதுடன் தேற்றாத்தீவு தேனுகா கலைகழகத்தின் செயலாளர் ச.செல்வப்பிரகாசிற்கு இதன் போது பல்துறைகலைஞர் என்று பட்டம் சூட்டப்பட்டது. அதே போல் திருவருள் நுண்கலை மன்றத்தின் நடன ஆசிரியை பவானி பிரபாகரன் நாட்டயபோரேளி என்றும் ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்திhல் வழங்கி வைக்கப்பட்டது. 

நாடக துறை ஆசிரியர் ரவிந்திரன் அவர்களாலும் , நடன ஆசிரியை பவானி அவர்களாலும் கலை நிகழ்வு பகிர்வில் பங்கு பற்றிய மாணவர்கள் மற்று கழக உறுப்பினர்களுக்கு நாடக, நடன பயிற்ச்சி வழங்கப்பட்டது.











Post a Comment

 
Top