முதன்முறையாக கொழும்பில் அகில உலக கிருஷ்ண பக்தி கழகத்தின் ஏற்பாட்டில் கோலாகலமான முறையில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 18.09.2016 மாலை 04.30 மணியளவில் பஜனை கீதங்களுடன் ஆரம்பமான நிகழ்வானது
தொடர்ந்து அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தவத்திரு பக்தி விகாஸ சுவாமி (இங்கிலாந்து) அவர்களின் சொற்பொழிவு , மந்திர தியானம், லட்சுமி நாராயணர் பூஜை , யார் முட்டாள் சிந்திக்க தூண்டும் நாடகம் என்பன இடம்பெற்றது .
இன்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் , மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள், ஆலயத் தலைவர்கள் , Isckon கோவில் தலைவர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிருஷ்ண பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நிறைவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன தொடர்ந்து கிருஷ்ண பிரசாதம் வழங்கப்பட்டு நிகழ்வானது நிறைவெய்தியது.
Post a Comment