மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பொதுநிருவாகம்,நிதி முறைமை பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ்-நீதிமன்றம் உத்தரவு
குறித்த கோயிலின் நிருவாகம் இநிதிஇ நிருவாக முகாமைத்துவ நிருவாக சம்மந்தமான நீதிமன்ற வழக்கு மிக நீண்டகாலமாக மாவட்ட நீதிமன்றத்தில் இரு தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நிலையில்
எதிர்வரும் காலங்களில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிருவாகம் இநிதிஇ நிருவாகமுகாமைத்துவம்,ஆலயத்தின் வரவு செலவுகள் நீதிமன்ற பதிவாளரூடாக நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் தற்போது ஆலயத்தில் கணக்குப்பிள்ளைகளாக கடமையாற்றுகின்ற நான்கு பேரும் அவர்களின் கடமைகளை ஆலய வண்ணக்கருடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் (24) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விடயம் சம்மந்தமாக ஆலய வண்ணக்கர் மற்றும் நான்கு கணக்கப்பிள்ளைகளுடான கலந்துரையாடலும் நீதிமன்ற உத்தரவினை அமுல்படுத்துவது பற்றி (06.09.2016)செவ்வாய்கிழமை ஆலயத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இம்முறை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

Post a Comment