வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதியினை பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பெற்றுக்கொடுத்தார்.
இவ்வுதவியை பிரான்ஸ் தேசத்தில் இருந்து வருகை தந்திருக்கும் T.R.T.தழிழ்ஒளி வானொளியின் அறிவிப்பாளர் எஸ்.சுஜேந்திரன் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டதிக்கினங்க இவ்வுதவியை அவர் செய்துள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 15 குடும்பங்களுக்கு இவ்வுதவியை பெற்றுக்கொடுத்தார்.
நேற்று (15) செங்கலடி குமாரவேலியார்கிராமம் மற்றும் அம்மன்புரம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மிகவும் அக் குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடி அவர்களுக்கான மேலும் தேவையான உதவிகளையும் பெற்றுத்தருவதாகவும், உடனடியாக இலவசமாக குடிநீர் வசதியை செய்துதருவதாகவும் கூறினார்.
Post a Comment