0
1987ம் ஆண்டு, 1991ம் ஆண்டு உயிர்இழந்த உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி மகிடித்தீவு மகிழை இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்றும்(09) இன்றும்(10) மகிடித்தீவு பிரதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

20க்கு மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக்கழகமும், காஞ்சிரங்குடா விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இவ்விரு அணிகளும் எவ்வித கோள்களும் உட்செலுத்தாமையினால் தண்டணை உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் முதலைக்குடா விநாயகர் அணி வெற்றி பெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.

உதைபந்தாட்டப் போட்டியில் முதல் நான்கு இடங்களையும் பெற்று வெற்றியீட்டிய  கழகங்களுக்கு பெறுமதிமிக்க கிண்ணங்களும், சிறந்த பந்துக்காப்பாளர், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

போட்டியின் இறுதி நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், அதிபர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
















Post a Comment

 
Top