0
நாடு முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையானது இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற கட்சியின் தொடர்பாடல் குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் விவசாயிகள் நில அபகரிப்பு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் நிலமானது அபகரிக்கபட்டிருக்குமானால், அதன் பொறுப்பை கமல சேவைகள் அதிகார சபையே ஏற்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நில்வளா கங்கையில் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதை தடுப்பதற்காக கங்கையின் இருபுறங்களிலும் பாதுகாப்பு வேலி அமைப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு அதிவேகப்பாதையின் எஞ்சியுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள், மற்றும் சிறியளவிலான நீர் மின் உற்பத்தியாளர்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும்இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top