0
மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தமான காணியில் இரண்டு ஏக்கர் காணியை ஓட்டமாவாடி பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு அனுப்பப்பட்டுள்ள கடிதம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் சாதிப்பது ஏன் என மாவட்ட சிவில் அமைப்புக்கள் கேள்வி எழுப்யுபிள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சொந்தான காணியில் இரண்டு ஏக்கர் காணியை ஓட்டமாவாடி பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளரினால் தேசிய கடதாசி கூட்டுத்தாபனதுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வழங்கக்கூடிய வாழைச்சேனை கடதாசி ஆலையை அபிவிருத்தி செய்யவேண்டிய அமைச்சு அதனை இல்லாது ஒழிப்பதற்கு முயற்சித்து வருவதாக சிவில் சமூக பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பல தொழில்சாலைகளை திறந்த வர்த்தக அமைச்சு மட்டக்களப்பில் உள்ள கடதாசி ஆலையை மட்டும் புனரமைப்பு செய்யாது இருப்பது, அதற்கு பின்னால் இனரீதியான அரசியல் இருப்பதேயாகும்.
அதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அமீரலி போன்றவர்கள் மிக தீவிரமாக செயற்பட்டுவருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாகவே குறித்த கடதாசி ஆலையின் காணியை ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளதுடன் மாவட்டத்தில் உள்ள காணி ஒன்றை அரசாங்க அதிபரின் அனுமதியின்றி வழங்க முடியுமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதன் பின்னால் திட்டமிட்ட குழுச்செயற்பாடு உள்ளதாகவும் இது தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் முயற்சி என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top