0
சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரித்தல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களும் 27.07.2016 நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தாறுமூலை வளாக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை நல்லையா மண்டபத்தில் ஒன்று கூடிய ஊழியர்கள் அங்கு நடைபெற்ற விஷேட கூட்டத்தினையடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதிய வயதினை 57 வயதிலிருந்து 60 வயதாக மறுசீரமைப்பு, வைத்திய காப்புறுதித் திட்டம் அறிமுகம், ஓய்வூதிய திட்டம் அறிமுகம், அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா அரச சம்பள திட்டத்திற்குச் சமமான சுற்றறிக்கை வெளியிட வேண்டும், எம்சி கொடுப்பனவுவை அதிகரித்தல், எம்.சி கொடுப்பனவை ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி கணிபீட்டில் சேர்த்துக்கொள்ளல்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவும் இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

பல்கலைக் கழக ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய், பல்கலைக் கழக ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் எங்கே?, அரசே ஓய்வூதியம் பெறும் வயதெல்லை சுற்றறிக்கையை 60 வயது வரை நீடித்து வழங்கு, ஓய்வூதியம் பெறும சுற்றறிக்கையை வயதெல்லையை உடனடியாக 60 வயதாக உடன் அமுல்ப்படுத்து, அரசே எம்.சி கொடுப்பனவை யூபிஎப், ஈபிஎப் கணிப்பீட்டுடன் இணைத்துக்கொள், எமது நீண்ட கால கோரிக்கைகள் நல்லாலட்சியிலாவது ஏற்றுக்கொள்ளப்படுமா?, அரச ஊழியர்களுக்கு சேர்க்கப்பட்ட 2500 ரூபா எங்களுக்கு இல்லையா ஏன் இந்த பாராபட்சம் போன்ற கோரிக்கைள் அடங்கிய பதாதைகள ஏந்தியவாறு கோசங்களையெழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் தமது கோரிக்கைகள் கொண்ட வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன் வளாகத்திற்குள்ளிருந்து பேரணியாக பிரதான வீதியோரத்திற்கு வந்து அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளன கூட்டு கமிட்டியினால் அரசாங்கத்திடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

 
Top