0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5வருடங்களாக யானையின் தாக்குதல் அதிகரித்திருக்கின்றது. இதற்கு தற்போதைய அரசு தீர்வு எடுக்காவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு ஒன்றினை எடுப்பார்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

தாந்தாமலையில் சனிக்கிழமை(23) அதிகாலை இடம்பெற்ற யானை தாக்குதலில் காயமடைந்தவரை மகிழடித்தீவு வைத்தியாசாலைக்கு சென்று பார்வையிட்ட பின்பே இதனை தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர் இதுதொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் மாவட்டத்தின் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான் பிரதேசங்களிலும் யானையின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் நெல்வயல்கள், தென்னைமரங்கள், பயிர்கள் அழிக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதகாலத்திற்குள் மாத்திரம் 60ஏக்கர் நெல்வயல்கள் அழிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் தேசமடைந்துள்ளது. இவை ஒன்றிற்கும் எவ்விதமான முடிவுகளும் எட்டப்படவில்லை. பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் போன்றோர்களை பொறுத்தவரை வனவிலங்கு திணைக்களத்தினை பொறுத்துதான் அவர்களது நடவடிக்கைகள் இருக்கின்றதே தவிர அவர்களால் இதற்கு எச்செயன்முறையும் எடுக்கப்படவில்லை.  அவ்வகையில் பொறுப்பு முழுவதையும் வனவிலங்கு திணைக்களம்தான் எடுக்க வேண்டும். அண்மையில் அமைச்சரவையை சந்தித்து பல முறைப்பாடுகளை வழங்கியும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

மட்டக்களப்பிலே இருக்கின்ற வனவிலங்கு திணைக்களத்திற்கான வளங்கள் குறைவாக இருக்கின்றதனால்தான் யானைகளின் தாக்குதலை குறைக்க முடியாதுள்ளது இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆளணி பற்றாக்குறை, வாகன பற்றாக்குறை, கருவிகள் பற்றாக்குறை போன்றன இருக்கின்றன. வனவிலங்கு அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் யானைகளின் அழிவுக்கு ஏற்றால்போல் வளங்கள் அதிகரிக்கப்படவேண்டும், ஆனால் நீண்டகாலமாக அதிகரிக்கப்படவில்லை தொடர்ச்சியாக இவ்வாறான வளங்கள் அதிகரிப்படவில்லையாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கவேண்டி நேரிடும் என்றார்.





Post a Comment

 
Top