கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மட்டக்களப்பு தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் இடையிலான சந்திப்பு கோட்ட கல்வி பணிமனையில் நடைபெற்றது.
இங்கு பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது . இந் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில் கௌரவ அமைச்சர் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இ த .தே.கூ தலைவருடன் இணைந்து செயற்படுவதாகவும் தமிழ் மக்களுடைய நலனில் அதிக அக்கறை செலுத்துவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த கால யுத்தத்தினால் தங்களது எதிர் காலத்தை கேள்வி குறியாக பார்த்துக்கொண்டிருக்கும் பல இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பில் தொழில் வாய்ப்பின்றி கஷ்ட்டப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் கல்வி அமைச்சின் கீழ் வரும் தேசிய பாடசாலைகளில் உள்ள கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

Post a Comment