0
வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவண மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 03.06.2016 வெள்ளிக்கிழமை  கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் இடம் பெற்றது.

இவ் வீட்டுத்திட்டமானது பயனாளிகளின் ஐம்பது வீத பங்களிப்புடன் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சின் ஐம்பது வீத நிதியளிப்பிலும் 550 சதுரடி கொண்டதாக அமையப்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு பயனாளிக்கும் பத்து பேர்ச் காணி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன் இம் மாதிரிக்கிராமத்திற்கு மின்சாரம்,வீதி,குடி நீர் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ச.வியாழேந்திரன்,பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்,பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.





Post a Comment

 
Top