மட்டக்களப்பு,புதுமண்டபத்தடி,காலையடிக்குளம் ஶ்ரீ வீரபத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் திருவிழா நேற்று வியாழக்கிழமை 23.06.2016 இரவு மிக சிறப்பாக இடம்பெற்றது.
இறுதிநாள் திருவிழாவின் விசேட பூசைகள் மிகச்சிறப்புடன் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இப் பூசை நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் வவுணதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நஷீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோர் ஆலய நிருவாகத்துடன் கலந்துரையாடியபோது,
பாடசாலைகளைப்போல் எமது மக்களுக்கு அறநெறிகளை வளர்ப்பதில் இந்து ஆலயங்களின் பங்களிப்பு, தற்போது உள்ளதைவிட மேலும் வளர்ச்சி பெறவேண்டும். இதற்காக இவ் ஆலய நிருவாகம் உட்பட அனைத்து இந்து ஆலயங்களின் நிருவாகங்களும் அக்கறையுடனும் தியாக மனப்பாங்குடனும் செயற்பட வேண்டும். எனும் கருத்துக்களை தெரிவித்தனர்.
Post a Comment