0
இந்துமா சமுத்திரத்தில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித்திருநாட்டில் கிழக்கின் திருப்பதியாக விளங்கும் மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா
நிகழும் துர்முகி வருடம் வைகாசி 26ம் நாள் 08.06.2016 புதன்கிழமை சுப வேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி 06ம் நாள் 20.06.2016 திங்கட்கிழமை உதயத்தில் சமுத்திர தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.

மஹோற்சவ பூஜைகள் விபரம்

08.06.2016- காலை 05.00 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் இடம்பெறும்.

09.06.2016- ஆலயத் திருவிழா (சுவாமி உள் வீதி உலா)

10.06.2016- புதூர்க் குடி மக்கள் (சுவாமிக்கு அன்னாபிஷேகம்,சுவாமி உள் வீதி,வெளி வீதி உலா)

11.06.2016- அத்தியா குடி மக்கள்
(பகல் 1008 சங்காபிஷேகம்,சுவாமி உள் வீதி,வெளி வீதி உலா)

12.06.2016- களுவத்தழுவத்தன் பனிக்குடி மக்கள் (சுவாமி உள் வீதி,வெளி வீதி உலா)

13.06.2016- காளியன் குடிமக்கள்
(சுவாமி கூர்ம அவதாரமாக வெளி வீதி உலா)

14.06.2016- செட்டியார் குடிமக்கள்
(காலிங்க நர்த்தனம் கொண்டு சுவாமி முத்துச்சப்புரத்தில் வெளிவீதி உலா)

15.06.2016- கவுத்தன் குடிமக்கள்
(சுவாமி உள் வீதி,வெளி வீதி உலா)

16.06.2016- காவேரி கண்ட குடிமக்கள் (முத்துப்பந்தலின் கீழ் அரிதுயில் கொள்ளும் அனந்த சயன உற்சவம்)

17.06.2016- புலவனார் குடும்பம் (திருவேட்டைத் திருவிழா,இரவு சுவாமி கெருட வாகனத்தில் வெளி வீதி உலா)

18.06.2016- மஞ்சள் பரமக் குடி மக்கள் (சுவாமி உள் வீதி,வெளி வீதி உலா)

19.06.2016- பெரிய பரமக் குடி மக்கள் (பகல் 1008 சங்காபிஷேகம்,இரவு உறியடி உற்சவம்,தீ மிதித்தல்)

20.06.2016- அதிகாலை களுவன்கேணி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் இடம்பெறும்.

மஹோற்சவ பிரதம குரு ஷப்தரிஷி இந்துகுரு பீடாதிபதி தேசமான்ய தேசப்பற்று வேதாகம வித்தியாபதி சாஹித்திய பாஸ்கரன் சிவஸ்ரீ.குமார விக்கினேஸ்வர குருக்கள்
(யாழ் வட்டுக்கோட்டை)

ஆலய பிரதம குரு விஷ்ணு பூஜா நவக்கிரக பூஜா துரந்தர் சோதிட இளம் சைவமணி சிவஸ்ரீ. சாட்சிநாதன் தெய்வேந்திரக் குருக்கள்
(யாழ் வட்டுக்கோட்டை)

மங்கள வாத்தியம்
எஸ்.ராஜ்குமார் குழுவினர்
(பதுளை)

நாதஸ்வரம்
சூரிய பிரகாஷ் குழுவினர்
(செட்டித்தெரு,கொழும்பு)

மஹோற்சவ நாட்களை சிறப்பிக்கும் முகமாக பகல் வேளையில்  அன்னதானமும்,இரவு வேளையில் கூட்டுப்பிரார்த்தனை, கதாப்பிரசங்கம்,மேளக்கச்சேரி என்பன இடம்பெறும்.

குறிப்பு-10.06.2016 வெள்ளிக்கிழமை பி.ப 04.00 மணிக்கு கடைகள் யாவும் ஏலத்தில் விடப்படும்.

எனவே அடியார்கள் அனைவரும் பக்திசிரத்தையோடு ஆசாரசீலர்களாக வருகைதந்து மூவடியால் உலகளந்த மூலவரின் இஷ்ட சித்திகளை பெற்றேகுமாறு அன்புடன்  அழைக்கின்றனர்.
ஆலய நிர்வாக சபையினர்.

Post a Comment

 
Top