0
மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்12ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கும் முகமாக மட்டக்களப்பு வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகம் நாளை 29 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 02 மணியளவில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளது.

சிரேஷ்ட பத்திரிகையாசிரியரும் வீரகேசரி வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியரும் தற்பொழுது தமிழ்த்தந்தி வாரப்பத்திரிகையின் ஆசிரியருமான வீ.தேவராஜ் இச்செயலமர்வை நடாத்தவுள்ளார்.

இவ் இலவச செயலமர்வில் ஊடகவியலாளர்கள்,ஊடகஆர்வலர்கள்,ஊடகப்பணியாளர்கள்,மாணவர்கள் ஆர்வமுள்ளவர்கள் எவரும் கலந்துகொள்ளலாம்.

செய்தியாக்கம், செய்தி தயாரிப்பு, ஆசிரியர்பீட பணிகள், மற்றும் ஊடகத்தில் தொழில் வாய்ப்பு தொடர்பான விடயங்கள் இச்செயலமர்வில் பயிற்றப்படவுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி சிவாநந்தா மைதானத்திற்கு எதிரில் உள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் தமது விபரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு நிறுவகத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு
0652222832, 0758265824 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

Post a Comment

 
Top