இலங்கை நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களின் மொழி ஒரு ஆட்சி மொழியாக இருந்திருக்கின்றது. தமிழ் ஆட்சியாளர்கள் வட கிழக்கிலும், இலங்கையில் முதலாவது இராஜ்ஜியமான அனுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதியில் தமிழர்கள் ஆட்சி புரிந்து இருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உழவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள், தடயங்கள் அழிக்கப்பட்டு சிதைவடைந்தும் போய்க் கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் தாய்மொழியான தமிழ் மொழி ஆட்சி மொழியாக வட கிழக்கிலும், இலங்கையில் முதலாவது ராஜ்ஜியமான அநுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதியிலும் இருந்திருக்கின்றது என ஆங்கில எழுத்தாளர் றொபட் நொக்சன் தனது சஞ்சிகையில் வெளியிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள், தடயங்கள் அழிக்கப்பட்டும், சிதைவடைந்தும் போய்க் கொண்டிருக்கின்றது.
இன ரீதியான, இனத்துவேசத்தை ஏற்படத்தக்கூடிய, இனவாதத்தை பரப்பக் கூடியவர்கள் உண்மையிலேயே இந்த நாட்டின் ஆரம்பத்திலேயே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதற்கு கல் வெட்டுக்கள் சான்றாக விளங்குகின்றது.
முதலாவது ஏட்டு இலக்கியம் எமக்கு கிடைத்தது கி.பி.1310ம் ஆண்டு. அதற்கு முன் இலங்கை வரலாற்றை அறிந்து கொள்வதாக இருந்தால் கல்வெட்டில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.
இன ரீதியாக இனக்குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுபான்மை சமூகமான தமிழர்களுக்கெதிரான கருத்துக்களை எதிர்த்தவர்கள் அன்று முதல் இன்றுவரை இந்நாட்டில் இருந்து வருகின்றார்கள்.
பதுளை மாவட்டத்திலுள்ள கல்வெட்டில் நாட்டை ஆளுகின்ற சிங்கள தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை தமிழர்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என்ற வரலாற்று பதிவு அங்குள்ளது. ஒரு இனவாதத்தை ஏற்படுத்தக் கூடிய தலைவர்கள் இங்கு வாழ்ந்துள்ளார்கள்.
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்வது எனக்கு பெருமை இல்லை. நான் ஆசிரியர் என்பதையே பெருமையாக விரும்புகின்றேன். எனது அரசியல் பதவி போனாலும் எனக்கு கவலை இல்லை. ஆசிரியர் சேவையே என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது என்றார்.

Post a Comment