0
இந்துமா சமுத்திரத்தில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித்திருநாட்டில் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையின் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரில் கலை கலாசார பாரம்பரிய விழுமியங்கள் வேரோடி நிற்கின்ற ஏரோடுகின்ற மண்ணிலே சிலம்பு தந்த கண்ணகியாள் சீற்றம் தணிந்து வந்தாறிய வரலாற்று தொன்மை மிகு கிராமமாம் வந்தோரை வாழவைக்கும் வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பெருவிழா 23.05.2016 திங்கட்கிழமை பி.ப 05.30 மணியளவில் பக்தர்கள் புடைசூழ மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வு விநாயகர் பானை பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமாகி தொடர்ந்து பக்க பானைகள் பொங்கலிடப்பட அடியார்களும் தங்களது நேர்த்திக்கடன் பொங்கல் பொங்கப்பட்டு தொடர்ந்து அம்பாளின் பூஜைகள்,மழைக்காவியம்,உடுக்கு சிந்து பாடப்பட்டு அம்பாளின் வெளிவீதி உலா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம் பெற்றது இறுதியாக குளிர்த்திபாடல் பாடப்பட்டு திருக்குளிர்த்தி இடம் பெற்றது

அத்தோடு ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் நலன் கருதி வந்தாறுமூலை இந்து இளைஞர் மேம்பாட்டு மன்றத்தினரால் வாகன பாதுகாப்பு நிலையமும்,வந்தாறுமூலை நலன் புரிச் சங்கத்தினரால் மாபெரும் தாகசாந்தி நிலையமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


























Post a Comment

 
Top