0
வாகரை பிரதேசத்திற்கு உட்பட்ட காயான்கேணி கிராமசேவகர் பிரிவில் விவசாயப் போதானாசிரியர் இ.துஷ்சந்தி தலைமையில் மேற்படி நிகழ்வானது. 13.05.2016 இடம்பெற்றது. மட்டக்களப்பு வலயம் வடக்கு விவசாய உத்தியோகத்தர், வேள்விசன் முகாமையாளர், வேள்ட் விஷன் திட்ட இணைப்பாளர் காயான்கேணி கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோத்தர், கிராம எழுச்சி உத்தியோத்தர்கள், பிரிவுக்குரிய குடும்ப நல உத்தியோகத்தர், விவசாய நல அமைப்பு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வானது செல்லத்தம்பி நவேந்திரன் என்பவரது வீட்டுத்தோட்டத்தில் நடைபெற்றது. இதில் விவசாய இரசாயணங்களால் ஏற்படும் பாதிப்புக்கள், இயற்கை பீடைநாசினி தயாரிப்பு, சேதனப்பசளை தயாரிப்பு, சணல், சோயா செய்கை, மூடுபடை முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு விவசாயப் போதனாசிரியர்களால் செய்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதில் காயான்கேணி வட்டவான் பிரிவுக்குரிய பயனாளிகள் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்தனர். இதில் வீட்தோட்ட பயனாளி அவரது விவசாய நடவடிக்கை அனுபவங்களையும் பயனாளிகளுடன் பகிர்ந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.







Post a Comment

 
Top