0
மட்டக்களப்பு வந்தாறுமூலை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு விழா 15.05.2016 அன்று காலை 10.00 மணியளவில் வந்தாறுமூலை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர் திரு.பு.சசிதரன் தலைமையில் வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சதாவிவம் வியாழேந்திரன் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அரவர்களும்,சிறப்பு அதிதிகளாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி திரு.Dr..E.சிறிநாத், கோட்டக்கல்வி அதிகாரி திரு.P.சிவகுரு மற்றும் அழைப்பு அதிதிகளாக  வந்தாறுமூலை மட்/ககு/விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு.S.மோகன்,இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.P.சிவராம், வந்தாறுமூலை கிழக்கு கிராமசேவக உத்தியோகத்தர் திரு.G.A.விஜயகுமார், வந்தாறுமூலை மேற்கு கிராம சேவக உத்தியோகத்தர் திரு.S.கோபு,திரு.V.பற்குணம் பிரதேச சபை செங்கலடி, அறநெறிப் பாடசாலை முன்னாள்  பொறுப்பாசிரியர் திரு.T.உமாபரமேஸ்வரன் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் சென்ற ஆண்டிற்கான அறநெறிப்பாடசாலையின் பரீட்சைகள் மற்றும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும்,தரம் 5ம் தர புலமைப்பரீட்சை, க.பொ.த சாதாரணதரம் மற்றும் க.பொ.த உயர்தரங்களில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு  ஞாபகார்த்த சின்னம் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.














Post a Comment

 
Top