தமிழர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப் படுகின்றன என்று மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மண்ணில் ஔவையாருக்கு சிலை திறக்கும் நிகழவில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த 3 தசாப்த்த கால யுத்தத்தின் மட்டும் அல்ல 2009 ம் ஆண்டு யுத்தம் மௌனித்ததில் இருந்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப் பட்டு வருகின்றது, இன்று குறிப்பாக இலங்கையில் வட கிழக்குக்கு அப்பாலும் தமிழர்களின் வரலாற்று பொட்டகங்கள் தமிழர்களின் அடையாங்கள் என அழிக்கப்பட்டு வருகின்றதை நினைத்து பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது .
இரண்டு தினங்களுக்கு முன் நான் பாராளுமன்றத்தில் பேசும் போது ஒரு விடயத்தை பதிவு செய்தேன் சோழர்கள் இன் நாட்டை ஆண்டார்கள் சோழர்கள் தமிழர்கள் மன்னர்கள் இன் நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு மிக பெரிய வரலாற்று சான்று பொலநறுவை .
பொலநறுவையில் இருக்கின்ற சோழ சாம்பிராட்சிய வரலாற்று கட்டிடங்கள் அங்கிருக்கின்ற சிவ தேவாலயங்கள் அதனுடைய நிலை என்ன ? நாளுக்கு நாள் அழிக்கப் பட்டும்நாளுக்கு நாள் சிதைக்கப் பட்டுக் காணமல் போய் கொண்டும் இருக்கும் நிலை இன்று காணப்படுகின்றது.
அதே சமயம் இது தொடர்பாக அமைச்சர் சுவாமி நாதனிடம் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளேன் வரவு செலவு திட்டத்துக்கு அப்பால் குறை நிரப்பு நிதி என 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளீர்கள் இந்த 200 கோடி ரூபாவில் எமது அடையாளமாக இருக்கின்ற நாம் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப் போகின்ற எமது வரலாற்று பொக்கிஷமான இந்த பொலநறுவை சோழர்களின் அடையாளங்களில் இனி ஒரு செங்கல் கூட சிதவடைவதற்கோ காணமல் போவதற்கோ இடமளிக்ககூடாது நீங்களும் தமிழ் அமைச்சர் என்ற முறையில் எமது வரலாற்றை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்
கடந்த 2 வருடங்களுக்கு முன் சித்தாண்டியை சேர்ந்த சிறுமி ஒருவர் சிகிரியாவில் ஒரு சித்திரத்தை சேதப்படுத்தியதாக 2 வருட சிறை தண்டனை வழங்கப் பட்டது இருந்தும் ஜனாதிபதியின் மண்ணிப்பின் பெயரால் அவர் விடுதலை செய்யப்பட்டார் ஆனால் இன்று எமது வரலாற்று பொக்கிஷம் அழிக்கப் பட்டு கொண்டிருந்தும் அதை எம்மால் தடுக்க முடியாதுள்ளது.
இந்த நாட்டில் பூர்வீக குடிகள் நாங்கள் வடக்கு கிழக்கு எமது தாயாக தேசம் இந்த நாட்டில் உள்ள சிறு பான்மை மக்களாகிய எம்மை நேசிக்கின்ற சிங்கள மக்களும் உள்ளனர் ஆனால் அரசியல் தலைவர்களோ இனவாத செயற் பாடுகளால் சிறுபான்மை மக்களை புறம் தள்ளி அரசியல் செய்கின்றனர் .
இந்த நாட்டில் இனவாதத்தை விதைக்கின்றவர்கள் இரண்டே இரண்டு பெயர் அதில் ஒன்று 1949ம் ஆண்டுக்கு பின் மாறி மாறி அரசியல் செய்த ஒரு சில அரசியல் தலைவர்களும் ஒரு சில மதத் தலைவர்களும் தான் இந்த நாட்டை சிதைவடைத்துள்ளர்கள்.
இனவாதத்தை மதவாதத்தை தூண்டி ஒரு வித அருவருப்பான அரசியலை நடத்திக் கொண்டு இருக்கின்றர்கள் 1994 ம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தலுக்கு இறங்கியபோளுது தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று கூரி இருந்தார் அப்போது போட்டி இட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் சந்திரிகா அம்மையாருக்கு துண்டு பிரசுரங்களை வினயோகம் செய்திருந்தனர் "வோட் போ சந்திரிக்கா கன்றி போ பிரபாகரன்" என்று ஒரு இனவத செயலை தூண்டினர் ஐக்கிய தேசிய கட்சியின் இனவாத செயல் இதுவே. எம் இனத்தின் இலட்ச கணக்கான உயிர்கள் போனதற்கு காரணம்.
ஒரு போதும் எமது இனத்துக்கு சிங்கள பேரினவாதம் தீர்வினை வழங்குவதற்கு தயார் இல்லை என்பதை மாறி மாறி அரசியல் செய்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஒரு சில சமய தலைவர்கள் இன்று உண்மையாக்கி கொண்டே இருக்கின்றர்கள் என்பதே நிதர்சனம்
இந்த நிகழ்வுக்கு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அரசாங்க அதிபர் மாநகர ஆணையாளர் மத தலைவர்கள் மட்டக்களப்பு வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment