0
சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நாளை புதன்கிழமையும், நாளைமறுதினம் வியாழக்கிழமையும் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை சிறைக்கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உறவினர்கள் கொண்டுவரும் புதுவருடப் பலகாரங்களைக் கைதிகள் பெற்றுக்கொள்வதற்கான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், மரணதண்டனைக் கைதிகள், ஆயுள் தண்டனைக் கைதிகள் உட்பட நீண்டகால சிறைத்தண்டனைகளை அனுபவித்துவரும் கைதிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுமெனவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளரும் ஆணையாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
பெண் கைதிகளுக்கும் தங்களது கணவன்மார்களுடனும் பிள்ளைகளுடனும் அளவளாவ அனுமதி வழங்கப்படுமெனவும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பகல் சகல கைதிகளுக்கும்
திணைக்களத்தின் ஏற்பாட்டில் காலை பாற்சோறும் நண்பகல் விசேட உணவும் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

 
Top