0
(செய்தியாளர்,மூலையூரான்)

இந்துமஹா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழும் இலங்கை திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கி வயல் நிலங்களையும் நீர்வளங்களும் சமுத்திரமும் சூழ அழகுறு கிழக்கு இலங்கையில் ஸ்ரீ ௧ண்ணகி அம்பாள் வந்தெறிச் சென்ற சிறப்பு இதிகாச புராண கிராமமாம் வந்தாறுமூலை எனும் புண்ணிய பூமியதில் வருவோர் வினைகளைந்து அருள் சுருக்கும் ஸ்ரீ நீர்முக விநாயகர் பெருமானுக்கும் பரிவாரமூர்த்திகளுக்கும் நிகழும் மங்களம் நிறை மன்மத ஆண்டு பங்குனி மாதம் 21ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நஷ்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய காலை 8.40 மணி முதல் 9.45 மணிவரை வரும் ரிசப லக்ன சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் செய்ய திருவருள் கூடியுள்ளதால் அத்தருணமும் அதற்கு முன் நடைபெறும் கிரியா கால வழிபாட்டிற்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

விழா ஆரம்பம்=30.03.2016.
புதன்கிழமை

எண்ணைக்காப்பு=01.04.2016.
வெள்ளிக்கிழமை,02.04.2016.சனிக்கிழமை

மஹாகும்பாபிஷேகம்=03.04.2016.ஞாயிற்றுக்கிழமை

அத்தோடு 36 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் நடைபெறும்.விழாக்காலங்களில் பக்த அடியார்கள் இந்துமத விழுமியங்களுக்கு அமைவாக உடையணிந்து விழாக்கால வழிபாடுகளிலும் கலந்து  நீர்முக விநாயகர் அருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்,

இவ்வண்ணம்
ஆலய நிர்வாக சபையும்,
பொதுமக்களும்

Post a Comment

 
Top