0
மண்டூரில் இருந்து குருமன்வெளி ஊடான எழுவான் கரை நோக்கிப் பயணிக்கும் பாதைக்கு பாலம் அமைக்குமாறு மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒரு கிலோ மீற்றர் தூரத்தினை இம்மக்கள் ஆபத்து மிக்க படகு(பாதை) மூலமே கடக்க வேண்டியுள்ளது.இதன் காரணமாக சில வேளைகளில் உயிர் ஆபத்தினையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இங்கு அரைமணி நேரத்திற்கு ஒரு தடவை படகு (பாதை) சேவை இடம்பெற்று வருகின்றது.இதனால் மக்கள் காத்திருந்தே தமது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படகின் மூலம் பயணிக்கும் அரச உத்தியோகத்தர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடும் மழை,காற்று,வெயில் வெள்ளம் ஏற்பட்டால் இப்பகுதியில் படகுச்சேவை இடம் பெறுவதில்லை இதனால் இரு பிரதேசங்களுக்குமான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை முற்றாக ஏற்படுகின்றது.

இந்த படகினூடான மக்களின் பயணங்கள் பற்றி நீண்டகாலங்களாக மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கை உரிய அதிகாரிகள்  எடுக்காத நிலைகண்டு மக்கள் கடும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.



Post a Comment

 
Top