0
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பீறீன் ஹஸன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளார்கள்.
இந்தச் சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும் அவுஸ்திரேலிய அரசின் நிதி உதவியால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர், யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்திருந்த தூதுவர் பீறீன் ஹஸன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு நேற்று (16) விஜயம் செய்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் பீறீன் ஹஸன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

 
Top