0

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட   திகிலிவெட்டை ஆற்றைக் கடப்பதற்கான இயந்திரப்பாதை பழுதடைந்தமையைத் தொடர்ந்து, அந்த இயந்திரப்பாதை கடந்த மூன்று வாரங்களாக இயங்காமையால் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

எனவே, பழுந்தடைந்துள்ள இயந்திரப்பாதையை திருத்தி சேவையில் ஈடுபடுத்துமாறும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சந்திவெளிக் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் திகிலிவெட்டைக் கிராமம் உள்ளது. 

இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை தரைவழியாக மேற்கொள்வதாயின், கிரான் - புலிபாய்ந்தகல் தரைவழியாக சுமார் 12 கிலோமீற்றர் தூரம் சுற்றியே பயணிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை திகிலிவெட்டை ஆற்றின் மூலமாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் மாத்திரம் மேற்கொள்ள முடியும். இந்த இயந்திரப்பாதை இயங்கமையால் மாற்றீடாகத் தோணி மற்றும் இயந்திரப்படகுகள் மூலமாக சேவை மேற்கொள்ளப்படுகின்றது.

இதையடுத்து அங்கு சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அப் பிரதேச நகர சபை செயலாளருடனும் மக்களுடனும் பல மணி நேரமாக உரையாடி இதற்கான தீர்வை மிகவும் குறுகிய தினத்தினுள் பெற்றுத் தருவதாகவும் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். 

Post a Comment

 
Top