0
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலைக்குடா கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலையடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்பெருவிழா 21.03.2016ம் திகதி மாலை சாந்தி கருமங்களுடன் ஸ்நபனாபிசேகமும்  விசேட பூசையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்று தொடர்ந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமையும் திருவிழாக்கள் இடம்பெற்று வியாழக்கிழமை(24.03.2016) காலை 06மணிக்கு தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.


பூசை விழாக்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான சிவஸ்ரீ.வ.ஹரிகரன் குருக்கள், சிவஸ்ரீ.ப.மானாகப்போடி குருக்கள், சிவஸ்ரீ.த.கோகுலதேவசர்மா, சிவஸ்ரீ.பு.நவரூபன்சர்மா ஆகியோரால் நிகழ்த்தப்படவுள்ளது.

Post a Comment

 
Top